இப்படி இட்டுக்கட்டி புரளி பேசுறீங்களே இது நியாயமா..? அனுஷ்கா விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபாஸ்..!!

4 months agoபாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார்.
‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.

இந்த தகவலை இருவருமே மறுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று பலரும் நம்பினர்.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தனது திருமணம் தொடர்பாக முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. ஊடகங்கள் என்னையும், அனுஷ்காவையும் இணைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் ‘சாஹோ’ படத்தில் உள்ளது என தெளிவாக கூறியுள்ளார்.
GET UPDATES