உடலோடு கருகிப்போனது உயிர்களின் நீதியும்: பள்ளி தீ விபத்து வழக்கு- அனைவரும் விடுதலை..!!

4 months agoகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். பள்ளி தாளாளர் பழனிசாமி உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனிசாமி மனைவி சரஸ்வதி ஆகியோருக்கு தஞ்சை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பழனிசாமி இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
GET UPDATES