பேமன்ட் இல்லாமல் முடங்கியது ரேமண்ட் வாழ்க்கை: நடு ரோட்டுக்கு வந்து விட்ட கோடீஸ்வரர்..!!

4 months agoஒரு காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக வலம் வந்தவர் தற்போது கையில் பணம் இல்லாமல், வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

இந்தியாவின் பிரபலமான ஜவுளி நிறுவனம் ரேமண்ட் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமானவர் விஜய்பாட் சிங்கானியா.

இவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ரேமண்ட் நிறுவனத்தில் எனக்கு இருந்த, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எனது மகன் கவுதமுக்கு அளித்து விட்டேன். ஆனால், இன்று எனக்கு ஒன்றுமே இல்லை. ஒரு காரோ, டிரைவரோ இல்லை.

மும்பையில் ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். தற்போது எனக்கு, 78 வயதாகிறது. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

மும்பையில் உள்ள ஜே.கே.ஹவுஸ் எனப்படும் 36 மாடிகள் கொண்ட கட்டட வளாகத்தில் எனக்கு ஒரு வீட்டை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
GET UPDATES