திடீரென நிகழ்ந்தது எப்படி..? கொடூரமான முறையில் பாரிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடையை ஏற்படுத்திய சாகசம்..!

4 months agoரொறொன்ரோ பெரும்பாகத்தின் நெடுஞ்சாலை 409, 401, 403, குயின் எலிசபெத் வே, டொன்வலி பாக்வே, மற்றும் கார்டினர் கடுகதி பாதை ஆகிய பரபரப்பான பாரிய நெடுஞ்சாலைகளில் நேற்று பிற்பகல் 12.30 ற்கும் 2.30ற்கும் இடைப்பட்ட நேரத்தில் மோட்ட சைக்கிள்களில் பாரிய குழு ஒன்று மிக ஆபத்தான முறையில் சைக்கிள்களை செலுத்தியதாக பல முறைப்பாடுகளை பொலிசார் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய நெடுஞ்சாலைகளில் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய குழுவினரை அடையாளம் காட்டுமாறு ஒன்ராறியோ பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் சைக்கிள்களை செலுததுவதும் நிறுத்துவதுமாக செயல் பட்டமை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

சாரதிகள் ஒன்றாக அணிதிரண்டு சாகசங்களi செய்துள்ளனரென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொடூரமான முறையில் பாரிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்களை தடை செய்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சாரதிகள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் அசையாது ஸ்தம்பித்த நிலையில் நின்று விட்டனரெனவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி சிமித் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை விடடு இறங்கி சகல விதமான சாகசங்களையும் வீதிகளில் நடாத்தியும் உள்ளனர்.
GET UPDATES