கைத்துப்பாக்கிகளுடன் கனடாவுக்குள் நுழையும் அமெரிக்கர்கள்: திகைப்பூட்டும் விடயத்தின் பின்னணி..?

4 months agoகனடாவுக்குள் பிரவேசித்த அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை எடுத்துவந்த, ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவோரில் பலரும் மரியாதைக்குரிய, சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கும் அமெரிக்க குடிமக்கள் எனவும், கனடாவுக்குள் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை அறிந்திராமையே அவர்கள் இவ்வாறு சிக்கிக்கொள்வதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தென் பிராந்தியங்களில் இருந்து வரும் 60 வயதுக்கும் அதிகமானவர்களே இவ்வாறான விவகாரங்களில் அதிகம் சிக்கிக் கொள்வதாகவும்,

தம்மிடம் இருக்கும் கைத்துப்பாக்கிகளை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு கனடாவுக்குள் நுழைய முடியும் என்பதும் பலருக்கும் தெரியாதுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.
GET UPDATES