கால்பந்து தரவரிசை: இலங்கையின் மோசமான தரநிலை..!!

2041 years agoகடந்த ஓரு மாதத்தில் இடம்பெற்ற மொத்தம் 64 சர்வதேச போட்டிகளின் அடிப்படையிலேயே புதிய தரவரிசையில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையில் கடந்த மாதம் நடைபெற்ற CONCACAF தங்கக் கிண்ணத் தொடரானது, தரவரிசையில் கீழ் இடங்களில் உள்ள அணிகளின் மாற்றத்தில் அதிக தாக்கம் செலுத்தியுள்ளது.

இலங்கை கால்பந்து அணியை பொறுத்தவரை எட்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் தரவரிசையில் தொடர்ந்தும் 197 ஆவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இதே இடத்தில் நீடிக்கும் இலங்கையின் மோசமான தரநிலை இதுவாகும்.

கடந்த தரவரிசை வெளியீட்டின்போது, 96ஆவது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 97ஆவது இடத்தில் இருக்கின்றது.

அடுத்து வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி பிஃபா தரவரிசை மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது.
GET UPDATES