எப்படி பந்து எகிரப்போகிறதோ..? 3வது டெஸ்ட்டுக்கான இலங்கை அணியில் துஷ்மந்தா, லஹிரு..!

4 months agoஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டுக்கான இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு கமாஜி இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை வந்துள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இப்போட்டியை வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணி காத்திருக்கிறது.

ஏற்கனவே தோல்வி மேல் தோல்வியால் நெருக்கடியில் உள்ள இலங்கை அணி, வீரர்களின் காயத்தாலும் சிக்கலில் தவிக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப், சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 2வது டெஸ்டில் காயமடைந்தனர். இவர்களுக்கு பதிலாக அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும், அறிமுக வீரராக லஹிரு கமாஜியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடைசி டெஸ்டிலும் இளம் வீரர்களுடன் இலங்கை ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கி, பலமிக்க இந்தியாவை எதிர் கொள்கிறது.
GET UPDATES