இலங்கை அணியை எதிர்கொள்ள சைனமன் பந்துவீச்சாளரா..? பரபரப்பில் மூன்றாவது டெஸ்ட் போட்டி..!!

2 weeks agoஇலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவ்வணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை 15 பேர் கொண்ட இந்திய அணிக்குள் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இலங்கை அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சைனமன் பந்துவீச்சாளரான குல்திப் யாதவ் அல்லது அக்சார் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
GET UPDATES