ஒன்றே கால் கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதக் குரங்கின் மண்டையோடு கண்டுபிடிப்பு..!!

4 months agoகென்யாவில் ஒன்றே கால் கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதக் குரங்கின் மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கென்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள துர்க்கானா ஏரி பகுதியில் எரிமலை சாம்பல் படிமங்களுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டையோடு நடுத்தர வயதை உடைய மனிதக் குரங்குடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் ஒன்றேகால் கோடி ஆண்டுகளுக்கு வாழ்ந்த மனிதக் குரங்கின் மண்டையோடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருவேறு குழுக்களுக்கு மத்தியில் நடந்த சண்டையில் இந்த மனிதக் குரங்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் மனித இனம் தோன்றியதற்கு முந்தைய காலகட்டம் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த மனிதக்குரங்கின் மண்டையோடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
GET UPDATES