அமெரிக்க ராணுவ தலைமையகம் Pentagon மீது ஜெட் விமானம்: பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மீது பறந்ததால் பரபரப்பு..!!

4 months agoரஷ்யாவின் ஆளில்லாத ஜெட் விமானம் அமெரிக்க ராணுவ தலைமையகமான (Pentagon) பெண்டகன் மீது பறந்ததாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் புதன்கிழமை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை, (Maryland) மேரிலேண்ட் பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஆகியவற்றுக்கு மேலே மிகவும் தாழ்வாக பறந்துள்ளது. இதே விமானம் அதிபர் டிரம்ப் விடுமுறையைக் கழித்துவரும் நியூஜெர்சி இல்லத்தின் மீது மாலை 5 மணியளவில் பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் 2002-ல் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் விமானங்கள் ராணுவ நிலைகள் மீது வான்வழி கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுகின்றன.

எனினும், இந்த முறை ரஷ்ய விமானம் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மீது பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
GET UPDATES