பொதுமக்களை அச்சுறுத்தும் இராணுவம்: பதற்றத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்..!!

a month ago



கடந்த 2 மாதங்களாக கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில், மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெடிபொருட்களின் சிதைவுகள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் வந்து வீழ்வதாகவும், அதனால் தமக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு செயலிழக்க செய்யும் வெடி பொருட்களை மக்கள் குடியிருப்புக்களிற்கு அருகில் மேற்கொள்ளாது, பொருத்தமான பகுதிகளிற்கு மாற்ற வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.








GET UPDATES