கனடாவின் மிகப்பெரிய வருடாந்த தெரு திருவிழா: TTC சுரங்க பாதை மூடல்..!!

3 months agoகிரேக்க நாட்டின் சுவைகளை சுவைக்கும் கொண்டாட்டம் ரொறொன்ரோவில் இடம்பெறும் மிகப்பெரிய உணவு திருவிழாவாகும்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு ஆரம்பமாகும் இத்திருவிழா காரணமாக ரொறொன்ரோநகரின் பாரிய வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

கனடாவின் மிகப்பெரிய தெரு திருவிழா இதுவாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்-பாரிய வீதி மூடல்களையும் உள்ளடக்கும்.

இது மட்டுமன்றி சென்ட்.லோறன்ஸ் சந்தை சுற்று பகுதி ரொறொன்ரோ பழைய டவுனில் வார இறுதியில் சென். ரோரன்ஸ் திருவிழா இடம்பெறுகின்றது.

மூன்று நாட்கள் இடம்பெறும் இவ்விழா காரணமாக பாரிய வீதிகளில் தடைகள் ஏற்படலாம்.

TTC சுரங்க பாதை மூடல்:

திருவிழாக்கள் காரணமாக வீதிகள் மூடப்படுவதுடன் மேலதிகமாக வார இறுதி நாட்களில் TTCசுரங்க பாதை லைன்1-ம் மூடப்பட்டிருக்கும்.

செப்பேர்ட் அவெனியு மேற்கு மற்றும் சென்.ஜோர்ஜ் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதி சுரங்கபாதை ரயில் சேவை மூடப்படும்.

சிக்னல் மேம்பாட்டு வேலைகள் காரணமாக சனி மற்றும் ஞாயிறு தினங்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது.
GET UPDATES