கழுத்தை இறுக்கும் வழக்கு: அமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை..!!

3 months agoயாழ். வித்யா மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு (CID) கடந்த 09 ஆம் திகதி சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் காணொளி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும், வட மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமும் வாக்குமூலங்களை பெறுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்ததும் அவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன், மேலும் நான்கு காவற்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடமும் சாட்சிகள் பெறப்படவுள்ளன.
GET UPDATES