அமெரிக்க அதற்கு ஒரு படி மேலே... கனேடியர்களின் மிக மோசமான அபிப்பிராயத்தை சம்பாதித்து விட்டதா..?

2041 years agoகனாடாவில் இயங்கிவரும் மக்கள் கருத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் அமெரிக்க அரசாங்கத்தின் மீது கனேடியர்கள் மிக மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள் மீது கனேடியர்கள் மிகுந்த அதிருப்தியுடன் செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தரப்படுத்தல் பட்டியலின் இறுதி இடத்தில் ரஷ்ய அரசாங்கம் காணப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதற்கு ஒரு படி மேலாக காணப்படுகின்றனர்.

குறித்த நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்போது, சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் குறித்த கனேடியர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதன்போது, கனேடியர்களின் பேராதரவு ஜப்பான் அரசாங்கத்திற்கே வழங்கப்பட்டது. ஜப்பானுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
GET UPDATES