குடியிருப்பு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டதா? சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை..!!

3 months agoகனடாவின், ஒன்ராறியோ மாகாணத்தின் வாஹன் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மர்மம் நிலவுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் யாருக்கும் பாதிப்பில்லை என் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கைகளும், விசாரணைகளும் தொடர்ந்து வருகின்ற போதிலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆதாரங்களை திரட்டும் வகையில் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுதல் அவசியம் என ஒன்ராறியோ தீயணைப்பு துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
GET UPDATES