நடிகர் தனுஷுக்கு 5 வருடம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்..?

3 months agoதற்போது திரைப்படங்களில் புகைபிடிப்பதை ஊக்கப்படுத்தியதாக நடிகர்கள் அஜீத், விஜய், தனுஷ் உள்ளிட்ட 25 நடிகர் நடிகைகளுக்கும், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில் மற்ற நடிகர்கள் போதிய விளக்கம் கொடுத்து இனி வரும் காலங்களில் தவிர்ப்பதாக கூறி இருக்கும் நிலையில், தனுஷ் மேலும் மேலும் அதனை ஊக்கப்படுத்தி வருகிறார்.

நோட்டிஸ் கொடுத்ததும் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி படம் முதல் பாகத்திற்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

இப்போது இரண்டாம் பாகத்திலும் சிகரெட் நாற்றம் தான் வீசுகிறது. இதனால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

முதல் முறை இது போன்ற காட்சிகளில் நடித்து சிக்கினால் 1000 ரூபாய் அபராதமும், ஒரு வருடம் ஜெயில் தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தால் சம்பந்தபட்ட நடிகருக்கு,

5 வருடம் சிறையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
GET UPDATES