கணவர் செய்த அந்த ஒரு விரும்பத்தக்க காரியம்: ஏஞ்சலினா ஜூலி – பிராட் பிட் தம்பதி மீண்டும் இணைய வாய்ப்பு..!!

3 months agoஆஸ்கார் வென்ற ஹாலிவுட் கனவுக் கன்னியான ஏஞ்சலினா ஜூலியும், பிராட் பிட்டும் சுமார் பத்தாண்டு காதல் வாழ்க்கைக்குப் பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால், சட்டப்படி மண முறிவை உறுதி செய்வதற்கான எந்த முயற்சியையும், ஜூலியோ, பிராட் பிட்டோ இதுவரை எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு பிராட் பிட் அளித்த பேட்டியில், குடிப்பழக்கத்தை கைவிடுவதுடன், சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.

அவரது இந்தப் பேட்டியால் ஜூலிக்கு ஏற்பட்ட மனமாற்றமே, விவாகரத்து நடவடிக்கையைக் கைவிடக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
GET UPDATES