அதிபர் தேர்தலின் போது கலவரம் வெடித்தது: கென்யாவில் பதற்றம்..!!

a week agoகென்யாவில் அதிபர் தேர்தலை ஒட்டி வெடித்த கலவரத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

5க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்ய அதிபர் உஹ்ரு கென்யாட்டா மீண்டும் தேர்தலில் வெற்றி வெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஆங்காங்கே கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

கிஸ்மு நகரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.

கிஸ்மு நகரம், எதிர்க் கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதி ஏன்பதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
GET UPDATES