சங்கக்கரா சாதனையை சம்ஹாரம் செய்யப்போகும் இந்திய வீரர் கே.எல்.ராகுல்: இன்றைய ஆட்டத்தின் போக்கை மாற்றிய உலக சாதனை..!!

3 months agoடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 7 அரை சதம் அடித்த உலக சாதனையாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் கே.எல். ராகுல் இடம்பிடித்துள்ளார்.

கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 57 ரன்கள் அடித்த ராகுல், தொடர்ந்து 6 அரை சதம் அடித்த இந்திய அணியின் முதல் தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

தொடர்ந்து ஆறு அரை சதம் அடித்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், குண்டப்பா விஸ்வநாத் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அரை சதம் அடித்து, தொடர்ந்து 7-வது அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனைப் பட்டியலில் ராகுல் இணைந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்களான எவெர்டன் வீக்கெஸ், ஆண்டி ஃபிளவர், சந்தர்பால், சங்கக்கரா ஆகியோர் உள்ளனர்.
GET UPDATES