பெற்ற மனம் பித்தா..?? உயிருடன் இருந்த குழந்தையை கொரியர் மூலம் அனுப்ப முயன்ற தாய்...!

a month ago



சீனாவில் 24 வயது பெண் தனது குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அதை பல பிளாஸ்டிக் பைகளால் பார்சல் போல சுற்றினார். பின்னர் குழந்தை பார்சலை கொரியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று ஒரு அனாதை இல்லத்துக்கு அனுப்பும்படி கூறினார்.

பார்சலில் உணவு பொருள் இருப்பதாக தெரிவித்தார். அதை கையில் வாங்கிய ஊழியர், பார்சலுக்குள் இருக்கும் பொருள் அசைவதையும், குழந்தையின் அழுகுரலையும் கேட்டார்.

சந்தேகமடைந்த அவர் அந்த பார்சலை பிரித்து பார்த்தார். உள்ளே கை, கால்களை அசைத்தபடி குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்ட அவர் அப்பெண் மீது போலீசில் புகார் செய்தார்.

சீனாவில் குழந்தையை அனாதையாக்குவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். அக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

எனவே குழந்தையை அனாதை விடுதிக்கு அனுப்ப முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் குழந்தை அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.








GET UPDATES