நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திய கனடா தம்பதி: நினைத்த ஒன்றை அடைய நாடகம் நடத்திய சம்பவம்..!!

3 months agoஇலங்கையில் இருக்கும்போது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கனடா நாட்டிலிருந்து வந்த தம்பதிகள் பொய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும்,

கனடா நாட்டில் காப்புறுதி பெறுவதற்காகவே தாம் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் நாள் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள்,

இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
GET UPDATES