The News Sponsor By
feature-top
feature-top

இந்திய முறையிலான தீர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு என வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். 


கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த ஊடக சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச இந்திய முறையிலான தீர்வுக்கு ஆதரவாக செயற்பட்டார். 

அதேபோன்று 2005ம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின் போது அப்பாேது இருந்த ஜனாதிபதி ஆனந்தசங்கரி கோரியவாறு இந்திய முறையிலான தீர்வு திட்டத்திற்காவது முயற்சி எடுக்கப்படும் எனும் வகையில் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏதாவது பேசப்பட்டதா என அவரிடம் வினவியபோது அவர் கருத்து தெரிவிக்கையில்இ

சமஷ்டியினை முன்வைத்து  தேர்தலில் போட்டியிட்டவர் தமிழ் மக்கள் வாக்களிக்காமையால் தோற்கடிக்கப்பட்டார்.

அப்போது சேனாதிராஜாஇ சம்பந்தன் வீடு வீடாக சென்று வாக்களிக்க வேண்டாம் என கூறினர். 

அன்று சமஸ்டி முறையில் வேட்பாளராக களம் இறங்கியவர் வெ்டிருந்தால் இன்று சமஷ்டி கிடைத்திருக்கும்.

ஆகையால் இன்று சமஸ்டியை சிங்கள மக்கள் விரும்பவில்லை. 

எனவேதான் நாம் கோரும் இந்திய முறையிலான தீர்வுக்கேனும் சம்மதம் தெரிவிக்கும் நபர்களிற்கு ஆதரவை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குவதற்காக காத்திருப்பது என்பது பொய்யானது. 

அவர்கள் ஆதரவு தெரிவித்து விட்டனர. இன்று அரசிகனால் இடம்பெறும் சகல நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றனர். 

பிரதமருடன் நேருக்கமாக பேசுகின்றனர். அவரை அழைத்து அறைகளில் கூடி பேசுகின்றனர். 

இந்த நிலையில் இவர்கள் ஆதரவு தெரிவிப்பதற்காக காத்திருப்பதாக பொய் கூறுகின்றனர். இவர்கள் காத்திருப்பது தமது சுயநலத்திற்காகவே.

 ஆதரவு தெரிவித்தால்தான் பல மில்லியல் ரூபாவிற்கு வாகன போமிற்றுகளை விற்க முடியும். 

இன்று எவராவது தமது வாகன போமிற்றை விற்கவில்லை என்று மனச்சாட்சியுடன் சொல்லட்டும். 

நாடாளுமன்றில் பல லட்சம் ரூபாய்களுடன் பெட்டிகள் கைமாறியுள்ளன. அவைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. 

அவர்கள் அரசாங்கத்திற்கு அதரவளித்தமைக்காக பல சலுகைகளை அனுபவித்தனர் என அவர் மேலும் பல விடயங்களை தெரிவித்தார்.

feature-top
feature-top