The News Sponsor By
feature-top
feature-top

வவுனியாவில்  நேற்று (03.11) இரவு 11மணியளவில்  வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவரை ஓமந்தை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து கள்ளிக்குளத்திலுள்ள தனது வீட்டிற்கு ஸ்கூற்ரி ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது நொச்சிமோட்டை பாலத்தடியில்  கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

தனது உடமைமையில் 500 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா கள்ளிக்குளத்தை சேர்ந்த 40 வயதுடைய  குடும்ப பெண்ணையும் அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

feature-top
feature-top