The News Sponsor By
feature-top
feature-top

வாணவெடி வெடித்ததனால் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை (2) கடான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடான, வடக்கு கதிரான , எட்டம்பஹவத்தவைச் சேர்ந்த தினித் டில்ஷான் என்ற 14 வயதுடைய பாடசாலைச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றின் பெரஹராவொன்று வீதி ஊர்வலம் வந்து கொண்டிருந்த வேளையில் அதன் போது மலர் வானவெடியொன்று வெடித்ததால் சிறுவனின் உடலில் தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுவனை சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

கடான, கிம்புலப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் 9 ம் தரத்தில் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Share This News
feature-top
feature-top