The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி சேவியர்கடை சந்தி பகுதியில் 16 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது. கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மாங்குளம் பொலிசார் கிலிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Share This News
feature-top
feature-top