The News Sponsor By
feature-top
feature-top

புதிதாக தேர்தலில் வென்று பதவியேற்றுக் கொண்ட இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர இருக்கிறார்.

அவர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார, வரலாற்று நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறுவதற்கு இந்தியாவிற்கு வருமாறு  அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபயாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்று நாள் பயணமாக கோத்தபயா ராஜபக்சே இன்று இந்தியா வர உள்ளார்.

Share This News
feature-top
feature-top