The News Sponsor By
feature-top
feature-top

ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெறுகின்ற தலைமைத்துவ சிக்கலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இறுதி முடிவினை எட்டாத நிலையிலேயே தோல்வியடைந்து வருகின்றன. கடந்த வியாழக்கிழமை (16ம் திகதி) இடம்பெற்ற கூட்டமும் எந்த முடிவையும் எட்டாமலேயே முடிவுற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சகாக்களும் இக்கூட்டத்தின் போது வெளிநடப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவராக்குவதற்கு கட்சியில் உள்ள பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கான தலைவர் தொடர்பான பேச்சுவார்த்தை 2023 ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

கட்சி யாப்பின்படி 2024 ஆம் ஆண்டுவரை தாம் தலைவர் பதவியில் நீடிக்க முடியும் என்பதால் கட்சிக்கு புதிய தலைவர் நியமிப்பது பற்றி இப்போதைக்கு பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் தமது கருத்துகளை இங்கு முன்வைக்கின்றனர்.

feature-top
feature-top