The News Sponsor By
feature-top
feature-top

COVID-19 இலிருந்து வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க உதவும் வகையில் சோபிஸ் மளிகைக் கடைகள் பணம் வாங்கும் இடத்தில் Plexiglas shields பயன்படுத்த உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஒரு சில கடைகளில் Plexiglas shields நிறுவப்பட்டது. ஒவ்வொரு கடையிலும் இதனை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"எங்கள் கடைகளில் துப்புரவு நெறிமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான புதிய நடவடிக்கைகளை நாங்கள் அறிவித்து வருகிறோம்" என்று சோபீஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கேல் மெட்லைன் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடை நேரங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்கப்படும் என்றும், ஊழியர்கள் இப்போது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கைகளை கழுவ வேண்டும் என்றும் அடிக்கடி கிருமி நீக்கம் செய்வார்கள் என்றும் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share This News
feature-top
feature-top