The News Sponsor By
feature-top
feature-top

கனடா ஸ்ரீ சண்முகநாத சுவாமி இந்து ஆலயம் மறு அறிவித்தல் வரை பக்தர்களுக்கான வழிபாடுகள் அனைத்தையும் இடைநிறுத்தியுள்ளது.

இது குறித்து ஆலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

கோவிட்-19 தொடர்பான முக்கிய அறிவித்தல் எமது நாட்டின் சுகாதார அமைச்சின் நிபந்தனையைக் கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கத்தினை மட்டுப்படுத்தும் வகையில், எமது மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு, கனடா சண்முகநாத சுவாமி இந்து ஆலயம், ஞாயிற்றுக்கிழமை March 22, 2020 நண்பகல் பூஜையினைத் தொடர்ந்து மறு அறிவித்தல் வரை பக்தர்களுக்கான வழிபாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை மிக மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

ஆலய நித்திய பூஜைகள் வழமைபோன்று நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம். மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்த்து, மருத்துவ சமூகத்தின் சொல்லுக்கு மதிப்பளித்து, எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் இருப்பிடங்களில் இருந்து வழிபாடு செய்வோம்.

எம்மால் இயன்றவரை முகநூலினூடாகப் பார்த்து வழிபடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம். உலகில் நிலவும் நெருக்கடி நிலைமை நீங்கி, சகல மக்களும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல சண்முகப் பெருமானை வேண்டுகிறோம். அனைவருடைய ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி! ஆலய நிர்வாகம்

Share This News
feature-top
feature-top