The News Sponsor By
feature-top
feature-top

கனடாவில் ஸ்காபரோவில் மக்களிடையே நன்மதிப்பு பெற்று இயங்கி வரும் பிரபல வணிக நிறுவனம் இரா சூப்பர் மார்கெட்டின் நன்மதிப்புக்கு கலங்கம் விளைவிக்கவும் வியாபார போட்டியின் நிமித்தமும் அந்த நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதாவும் அதனால் அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும் பிரபல ஊடகத்தில் செய்தி வந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பொய்யான விபரணசெய்தி ஒன்று உலாவி வருவதை அவதானிக்க முடிகின்றது.


உண்மையில் வேறு ஒரு இடத்தில் நடந்த சம்பவத்தை இங்கு நடந்ததாக கனடாவில் பிரபல ஊடக லொகோவை பயன்படுத்தி இச்சம்பவம்  இரா சூப்பர் மார்கெட்டில் நடந்ததாக பொய்யான செய்தி பரப்பியுள்ளார்கள். 

கனடாவில் கொவிட் 19 அனர்த்தம் ஆரம்ப கால நிலையில் தமிழ் மற்றும் இதர மொழிபேசும் மக்களுக்கு ஆரம்ப விலையில் மாற்றமில்லாது வழங்கி நன்மதிப்பு பெற்ற இந்நிறுவனத்தின் மீது அபாண்ட முறையில் இப்படி பழி போடுவது வியாபார போட்டியேயாகும் 

உலகையே அச்சுறுத்தும் கொரோனா எதிராக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கனடாவில் சிலர் போட்டி,பொறாமையில் அபாண்ட முறையில் இப்படி பழி போட்டு ஓடுவது கையாலாகாத்தனத்தின் கடைசிக்கட்டமோ ?

feature-top
feature-top