The News Sponsor By
feature-top
feature-top

இலங்கையில் 500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என தாம் நம்புவதாக அரச வைத்தியர் சங்க வட மாகாண இணைப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் நூறு பேர் வரை இனங்காணப்பட்டுள்ள நிலையில் இதற்கு அதிகமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் இனங்காணப்படாமல் இலங்கையில் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

விஞ்ஞான பூர்வமாக இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றுவதன் அடிப்படையில் கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்படாமல் 400இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வரை இருப்பார்கள் என நம்பவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பல்வேறு இடங்களில் 20 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று குறித்த மருவத்துவப் பிரிவுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்தியசாலை என்பன தயார் நிலையில் உள்ளன. எனினும் குறித்த வைத்தியசாலைகளுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This News
feature-top
feature-top