The News Sponsor By
feature-top
feature-top

Ajax நகரில் காணாமல் போயுள்ள தங்கராஜா ஜெயகுமார் என்ற தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு Durham பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.

இவர் இறுதியாக March மாதம் 24ஆம் திகதி 2020ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணியளவில், Ajax நகரில் Rossland Road East and Audley Road அருகிலுள்ள தனது இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார்.

தனது வாகனத்தில் புறப்பட்ட இவர் வீடு திரும்பவில்லை. இவரது நல்வாழ்வு குறித்து குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர் .

ஜெயகுமார் குறித்தோ அல்லது அவரது வாகனம் குறித்தோ தகவல் அறிந்தவர்கள் Durham பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையினரை 1-888-579-1520 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்

Share This News
feature-top
feature-top