The News Sponsor By
feature-top
feature-top

இன்று 85,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாசிடிவ் நோயாளிகளுடன் உலகிலேயே வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக இத்தாலியிலும் ஸ்பெயினிலும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த இரு நாடுகள்தான் முதலில் சீனாவை விஞ்சும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காமல் அமெரிக்கா முதல் இடத்துக்குச் சென்றுள்ளது பிற நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

அங்கு பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளன என்பது சற்றே நிம்மதியான விஷயம். அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மொத்த நாடும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மட்டும் 3 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் கொண்டாடும் பண்டிகையான ஈஸ்டர் வரும் ஏப்ரல் மாதத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதற்குள் தங்கள் நாட்டு நிலையைச் சரிசெய்து ஊரடங்கைத் திரும்பப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் ட்ரம்ப்.

இந்நிலையில் அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் நிலையிலிருந்து மீள வேண்டுமென்றால் 6 முதல் 10 வாரங்களுக்குக் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

Share This News
feature-top
feature-top