The News Sponsor By
feature-top
feature-top

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக்க கனடா – அமெரிக்க எல்லையினை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பயன்படுத்தாத வகையில் மூடுவதற்கு கடந்த வாரம் இரு அரசாங்கங்களும் தீர்மானித்திருந்தன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கனடா எல்லை பகுதியில் தனது படையினை நிறுத்தும் அமெரிக்காவின் யோசனைக்கு கனடா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் குறித்த முன்னெடுப்பு தேவையற்ற ஒன்று எனவும், குறித்த நடவடிக்கையினால் இரு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு எனவும் கனடா நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துடன் கடந்த 18 மாதங்களாக தாம் நல்ல உறவினை பேணிவரும் நிலையில், சமரசமற்ற குறித்த கருத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனடா மேலும் தெரிவித்துள்ளது.

feature-top
feature-top