The News Sponsor By
feature-top
feature-top

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் மூலம் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1625 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 10 வீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவாகிய மிக பெரிய தங்க விலை அதிகரிப்பாக இது கருதப்படுகின்றது.

இதேவேளை, தங்க விலை எதிர்வரும் 3 வருடங்களுக்கு 3000 டொலர் வரை அதிகரிக்க கூடும் என பொருளியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Share This News
feature-top
feature-top