The News Sponsor By
feature-top
feature-top

வடக்கில் காணப்பட்ட தொற்றுநீக்கி திரவ பற்றாக்குறை அங்கஜன் இராமநாதனின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்பட்டது. இதற்காக அம்பாறையிலிருந்து எதனோல் திரவம் நேற்று விசேட பாதுகாப்பின் மத்தியில் எடுத்து வரப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலை அடங்கலாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலைக்கும் நேற்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று நீக்கப்படுவதற்கான பற்றாக்குறை காணப்பட்ட நிலையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அங்கயன் இராமநாதன் முயற்சி எடுத்திருந்கார்.

இந்த நிலையில் விசேட பாதுகாப்பின் மத்தியில் பவுசர்களில் எடுத்து வரப்பட்ட குறித்த திரவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமைகளிற்கும் பகிர்ந்தளிகஎகப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top