The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பளை புலானாய்வு பொலீசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பளை பொலிசார் குறிப்பிட்டனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சி கிழக்க வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் கஞ்சா கொண்டு வருவதாக பளை புலனாய்வு  பொலீசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலீசார் படகில் இருந்து கஞ்சா இறக்கும் போது படகில் இருந்த நபர் 114 கிலோ கஞ்சாவுடன் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் படகு மற்றும் படகின் இஞ்சின் என்பன கைப்பற்றப்பட்டு பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share This News
feature-top
feature-top