The News Sponsor By
feature-top
feature-top

கிளிநொச்சி வாகன விபத்தில் 64 வயதுடைய வயோதிப பெண் பலி. கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 64 வயதுடைய வயோதிப பெண் பலியானதுடன் உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த 64 வயதுடைய சுப்ரமணியம் அன்னலட்சுமி என்ற வயோதிப பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்த தாயாரின் மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த ரிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top