The News Sponsor By
feature-top
feature-top

வளர்ந்த நாடுகள் வரிசையில் முன்னிலையில் இருக்கக்கூடிய அமெரிக்கா, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், அரசியலையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்று உலகளவில் நடைபெறும் பல்வேறு உள்நாட்டுப் போர்களின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கு பட்டவர்த்தனமானதாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கறுப்பின (நீக்ரோ) மக்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர். அடிமை வியாபாரத்துக்கென்றே அமெரிக்காவில் சந்தைகள் இருந்தன. வடக்கும், தெற்குமாகப் பிரிந்திருந்த அமெரிக்க மாகாணங்களில் தெற்கு மாநிலங்களில் வடக்கைக் காட்டிலும் அடிமைமுறை என்பது மிகத் தீவிரமாக இருந்தது. வடக்கும், தெற்குமே வெவ்வேறான பொருளாதார அமைப்புகளைக் கொண்டிருந்தன. அடிமை முறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சியின் ஆப்ரஹாம் லிங்கன், 1861-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தெற்கு மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிவினையை அறிவித்தன. தற்போது அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொருளாதார அளவில் சற்று முன்னேறியிருந்தாலும், அவர்களுக்கு எதிரான நிறவெறி என்பது பல்வேறு வடிவங்களுடன் இப்போதும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் Minneapolis காவல்துறையினர் ஒரு கறுப்பின ஆணை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதைக் காட்டும் காணொளி இது. https://www.facebook.com/abinayaa123/videos/10157009160796822/ மூச்சு விட முடியவில்லை, தண்ணீர் தாருங்கள்! என்று கேட்டு கெஞ்சும் அந்த மனிதரை இரக்கமே இல்லாமல் கீழே விழுத்தி கால் முட்டியினால் அமத்தியே கொல்லும் இந்த அநீதியை காணொளி எடுத்திருக்காவிடில் யாரும் அறிந்திருக்க முடியாது. இந்த உலகில் இன ரீதியான கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? அநீதியாகக் கொல்லப்பட்ட்ட George Floyd ஆத்மா சாந்தியடையட்டும் ! சம்பந்தப்பட்ட 4 காவல்துறையினர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். நடக்குமா??

Share This News
feature-top
feature-top