The News Sponsor By
feature-top
feature-top

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாதீமா ஹாதீயா அரச சாட்சியாளராக மாறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதீமா ஹாதீயா, ஷங்ரீலா ஹோட்டல் மீதான தாக்குதல் உள்ளிட்ட முக்கிய தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பல முக்கியமான விடயங்களை இரகசிய ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றின் மூலம் வழங்கியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குறித்த வாக்கு மூலத்தை ஹாதியா வழங்கியுள்ளார் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top