The News Sponsor By
feature-top
feature-top

திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் சோமரசன்பேட்டை, அதவத்தூர்பாளையம் பகுதியில் காணாமல்போன மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவியை மாலையில் சடலமாக பார்த்ததாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாணவி கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே  அண்மையில் புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,  கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This News
feature-top
feature-top