The News Sponsor By
feature-top
feature-top

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து போலியான சுவாசக் கருவி சரியான பாதுகாப்பை வழங்காது. தற்போது கனடாவில் போலியான சுவாசக் கருவிகளைக் கண்டறியப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு, ஹெல்த் கனடா பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  


இது குறித்து வெளியான அறிவிப்பில், பிரபல நிறுவனத்தின் தயாரிப்பை போலவே உள்ள, போலியான N95 சுவாசக் கருவிகளை விற்பனை செய்வதாகக் கண்டறியப்பட்டது.


நிறுவனம் தனது தயாரிப்பு விற்பனையை நிறுத்தி திரும்பப் பெறுமாறு கூறப்பட்டுள்ளது. போலியான தயாரிப்பு கனேடிய சந்தையில் நுழைவதைத் தடுக்கக் கனடா எல்லை சேவைகள் முகமையுடன் இணைந்து செயல்படுகிறது.


கோவிட்-19 மற்றும் பிற வைரஸ்களுக்கு எதிராக சரியான பாதுகாப்பை வழங்காததால், இந்த முகமூடிகளில் ஒன்றைப் பயன்படுத்தும் எவரும் இதைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஹெல்த் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த சுவாசக் கருவியை பயன்படுத்தும் அனைவரும் தேவையான பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுக்கு சுவாசக் கருவிகளை வழங்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Share This News
feature-top
feature-top