The News Sponsor By
feature-top
feature-top

Scarborough-ல்  ஈழத்தமிழ் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


Torontoவில் Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி  Theepa Seevaratnam என்ற 38 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.


யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாக கொண்ட இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Steadley Kerr வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த Gary Samuels மற்றும் Toronto-வை சேர்ந்த Vijendran Balasubramaniam ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இவர்கள் இருவரின் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

Share This News
feature-top
feature-top