The News Sponsor By
feature-top
feature-top

நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் முற்றாக இல்லாதொழிக்கப்படாத நிலையிலும், பெரும்பாலான வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதவில் மேலும் கூறியிருப்பதாவது,

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்களினாலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் பெரும்பாலான பொதுத்தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படவில்லை.

இன்னமும் எமது நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் முற்றாக இல்லாதொழிக்கப்படாத நிலையில், இவ்வாறு செயற்படுவது முறையற்றதாகும் என்று அவர் விசனம் வெளியிட்டிருக்கிறார். 

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அரசாங்கத்திற்கும் வணிகங்களுக்கும் ஏற்பட்ட இழப்புக்கள், வேலையிழப்புக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பொருளாதாரமும் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் மதிப்பீடொன்றைச் செய்யவில்லை.

முறையான தரவுகளின்றி மேற்கொள்ளப்படும் திட்டமென்பது இறுதியில் தேவையானவற்றை விட்டுவிட்டு, தேவையற்றவற்றை மேம்படுத்துவதாகவே அமையும்.

தற்போதைய தருணத்தில் நாட்டின் விரிவான பொதுச்சேவை உயர் செயற்திறனுடன் பயன்படுத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். 

Share This News
feature-top
feature-top