The News Sponsor By
feature-top
feature-top

ஆந்திராவில் மருமகனை வரவேற்க மாமியார் ஒருவர் 67 வகையான உணவு சமைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீட்டிற்கு வரும் உறவினரை எப்படி கவனிப்பது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆந்திரப் பெண் ஒருவர் தனது சமையல் கை வண்ணத்தால் அசத்திக் காண்பித்துள்ளார். தனது வீட்டிற்கு வரும் மருமகனை வரவேற்று 5 கட்டமாக உணவுப் பரிமாறுவதற்காக, அப்பெண் 67 வகையான உணவுகளை தயார் செய்துள்ளார். வரவேற்பு பானம் முதல் சாப்பிட்டு முடித்த பின் போட வேண்டிய பீடா வரை அவர் சமைத்துள்ளார்.

இந்த தகவலை ஆனந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான தகவல்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 

This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc

— Ananth Rupanagudi (@rananth) July 8, 2020

 

Share This News
feature-top
feature-top