The News Sponsor By
feature-top
feature-top

ஈரான் தலைநகர் தெஹ்ரனில் இருந்து 200 மைல் தொலைவில் உள்ள நடன்ஸ் பகுதியில் உள்ள முக்கிய அணு ஆயுத செறிவூட்டல் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வெடி விபத்துகள் ஏற்பட்டது. 

இந்த வெடி விபத்து காரணமாக அணு ஆயுத செறிவூட்டல் மையம் பெரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையில் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் மையம், மின் உற்பத்தி மையம், வேதிப்பொருள் உற்பத்தி மையத்தில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு வருக்றது. 

இந்த விபத்துக்கான காரணங்கள் எவை என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் அணு ஆயுத மையம், மின் உற்பத்தி அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்துவதாக ஈரான் அரசு குற்றச்சாட்டியுள்ளது. 

அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றச்சாட்டியுள்ளது.

ஈரானின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் மறுப்பு தெரித்துள்ளது மட்டுமல்லாமல் இது அடிப்படை ஆதாரமற்றது எனவும் தெரிவித்துள்ளது.

Share This News
feature-top
feature-top