The News Sponsor By
feature-top
feature-top

கியூபெக்கில் இரண்டு சிறுமிகளும் அவர்களது தந்தையும் மர்மமான முறையில் மாயமான நிலையில், ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு கியூபெக்கைச் சேர்ந்த மார்ட்டின் கார்ப்பெண்டர், தனது மகள்கள் நோரா (11) மற்றும் ரோமி (6) ஆகியோருடன் மாயமானார், அவர்கள் சென்ற கார் சற்று தொலைவில் விபத்துக்குள்ளாக, தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அங்கு சென்றபோது காரில் யாருமில்லை.

சாட்சியங்கள் மற்றும் குழந்தைகளின் தாயார் ஆகியோரிடம் விசாரித்ததிலிருந்து, மார்ட்டின் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் நம்புகின்றனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவிய நாடியுள்ளதோடு, ஆம்பர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையில் விசாரணையில் விபத்து நடந்தபோது, காரில், இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமிதான் இருந்தாள் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Share This News
feature-top
feature-top