The News Sponsor By
feature-top
feature-top

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் மாணவியின் சகோதரன் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து, கிளிநொச்சி பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

300 இற்கும் அதிகமான மாணவர்கள், விரிவுரையாளர்கள், பிற பணியாளர்கள் பல்கலைகழகத்திற்குள்ளே தற்போது தங்கியுள்ளனர்.

பல்கலைகழகத்தில் தங்கியிருப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாணவியின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மதியமளவில் வெளியாகும். மாணவியின் பரிசோதனை முடிவை பொறுத்தே, பல்கலைகழகத்தில் தங்கியிருப்பவர்கள் குறித்த அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை மாணவிக்கு தொற்று உறுதியானால், கிளிநொச்சி வளாகம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவி தற்போது கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று பின்மாலை பொழுதிலேயே கிளிநொச்சி வளாகம் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னர் பல்கலைகழகத்தை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். அவர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள்.

அத்துடன், நேற்று மாலையில் கிளிநொச்சியில் நடந்த பல தேர்தல் பரப்புரை கூட்டங்களிலும் பல்கலைகழக உத்தியோகத்தர்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

மாணவிக்கு தொற்று உறுதியாகும் பட்சத்தில் கிளிநொச்சி லொக் டவுன் ஆக்கப்பட்டே பல்ககைழகத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட வேண்டுமென சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வர வேண்டுமென்பமே இப்பொழுது அனைவரதும் பிரார்த்தனை.

Share This News
feature-top
feature-top