The News Sponsor By
feature-top
feature-top

உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார்.

34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது.

16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்பும் நபருடன் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதில் தான் மகிழ்ச்சியும் நன்றியுடனும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Share This News
feature-top
feature-top