The News Sponsor By
feature-top
feature-top

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 35 ஏக்கர் காணி கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காணிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஷார ஜெயசிங்கவினால் இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை  –  கும்புறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சொந்தமான காணிகளே வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த காணிகள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்காக  விவசாயம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுற்காக வழங்கப்பட்டுள்ளதாக திஷார ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இக்காணியினூடாக  சுற்றுலாத்துறை மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதுடன் சர்வதேச இளைஞர் அபிவிருத்தி வலையம் ஒன்றினை உருவாக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை தூர நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்  இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஷார ஜெயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This News
feature-top
feature-top